சாலையை கடக்க முயன்ற பொது இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள வடகரை ஆத்தூரில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது உறவினர் சண்முகம் என்பவருடன் மொபட்டில் கரூருக்கு புறப்பட்டார். இதனையடுத்து பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே உள்ள நாமக்கல்-கரூர் பைபாஸ் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது கரூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் சண்முகம் மற்றும் துரைசாமி ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே துரைசாமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தற்போது சண்முகத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.