மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தகுமார்(32) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் ஆனந்தகுமார் தனது நண்பரான விஸ்வநாதன் என்பவரை பார்ப்பதற்காக மோட்டார் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆனந்தகுமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.