Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. படுகாயமடைந்த 17 பேர்…. திருச்சியில் கோர விபத்து….!!

சரக்கு வேன் மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலியான நிலையில் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கலைக்குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக விரதம் இருந்தனர். இந்நிலையில் விரதம் முடிந்த பிறகு பக்தர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு செல்வதற்காக கோவில் பகுதியில் அமர்ந்திருந்தனர். அப்போது கலைக்குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் என்பவர் சரக்கு வேனில் காய்கறி மூட்டைகளை ஏற்றி வந்து சமயபுரத்தில் இறக்கியுள்ளார். அவரிடம் பெண் பக்தர்கள் தங்கள் ஊருக்கு அழைத்து செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.

இதனால் அர்ஜுன் 17 பெண்களை சரக்கு வேனில் ஏற்றி கொண்டு ஊருக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நம்பர் 1 டோல்கேட் அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் சரக்கு வேனின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறிய சரக்கு வேன் சாலையில் கவழ்ந்துவிட்டது. இதில் பெண் பக்தர்கள் 17 பேர், சரக்கு வாகனத்தின் டிரைவர், கிளீனர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே வசந்தி, சாந்தி ஆகிய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். மற்ற அனைவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான முகமது உசேன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |