Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. படுகாயமடைந்த 7 பேர்…. புதுக்கோட்டையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார்கள் மோதிய விபத்தில் தம்பதியினர் உள்பட 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியில் சுரேஷ்குமார்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா(34) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நிகிதா(9) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் தனது மனைவி மற்றும் மகளுடன் காரில் தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற சுப்பையா என்பவர் மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக சுப்பையாவின் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. மேலும் அவ்வழியாக மணிவேல் என்பவர் ஓட்டி வந்த காரும் சுரேஷ் குமாரின் கார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் குமார், சங்கீதா உள்பட 7 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |