மொபட் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் இடையவர்வலசை பகுதியில் சந்துரு என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மொபட்டில் கிழக்கு கடற்கரை சாலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ரெகுநாதபுரத்தில் இருந்து தேவிபட்டிணத்தை நோக்கி சென்ற கார் எதிர்ப்பாராத விதமாக சந்துருவின் மொபட் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் சந்துரு பலத்தகாயமடைந்துள்ளர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சந்துருவை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சந்துரு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையறிந்த கேணிக்கரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான தேவிபட்டிணம் பகுதியை சேர்ந்த விஜய் என்பவரை கைது செய்துள்ளனர்.