கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கே.முத்துசாமிபுரம் பகுதியில் சரவணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான நல்லதம்பி என்பவருடன் நென்மேனி சாலையில் இருக்கும் மின்சார அலுவலகத்தில் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் வாலிபர்கள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சரவணகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை அடுத்து படுகாயம் அடைந்த நல்லதம்பி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.