மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் பகுதியில் கூலி தொழிலாளியான கணேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வளையல்காரன்புதூர் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த கணேஷ்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு கணேஷ்குமாரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.