மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேலூர் கிராமத்தில் சிவசங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பரான முனியப்பா என்பவருடன் கம்பி கட்டும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் உகாதி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து வீட்டு செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருதுகோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபர்களின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.