மொபட் மீது அரசு பேருந்து மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் சடையால்பட்டியில் செல்லையா(64) என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தேனி-போடி சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது கோடங்கிப்பட்டி கூட்டுறவு சங்க அலுவலகம் அருகே சென்ற பொது எதிரே தேனியை நோக்கி வந்த அரசு பேருந்து திடீரென மொபட் மீது மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த செல்லையாவை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து அரசு பேருந்து டிரைவர் பெரியகுளத்தை சேர்ந்த கந்தசாமி(52) மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.