டிப்பர் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 16 தொழிலாளர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொல்லப்பள்ளி என்ற இடத்தில் தனியார் கார்மெண்ட் நிறுவனம் இயங்கி கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் 39 தொழிலாளர்கள் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்தில் ஓசூரில் இருந்து கொல்லப்பள்ளி நோக்கி சென்றுள்ளனர். இந்த பேருந்தை திம்மராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.
இந்நிலையில் கோபசந்திரம் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற டிப்பர் லாரியின் பின்புறம் பேருந்து பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 16 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இதனையடுத்து படுகாயம் அடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.