மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் உடல் நசுங்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அம்பிகாபுரம் மேல புதூரில் சுரேஷ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நள்ளிரவு நேரத்தில் தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரியமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த பேருந்து சுரேஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த சுரேஷ்குமாரின் மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதால் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.