இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் தம்பதியினர் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள மருதத்தூரில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கருப்புசாமி தனது மனைவி மற்றும் மைத்துனர் ஆறுமுகம் ஆகியோருடன் பூலாம்பாடியில் இருக்கும் மாமியார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஏ.அகரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த பேருந்து கருப்புசாமியின் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருப்புசாமி, ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த செல்வராணியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வராணி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருப்புசாமி மற்றும் ஆறுமுகம் ஆகிய இருவரின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.