மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிறப்பகவுண்டன்பட்டியில் கூலி தொழிலாளியான சிவா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக வெளியே புறப்பட்டுள்ளனர். இவர்கள் பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த மினிவேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதனை அடுத்து படுகாயமடைந்த ஐஸ்வர்யாவை அருகில் உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மினி வேன் ஓட்டுநரான பொன்னுசாமி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.