மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி பாரதி தெருவில் தொழிலதிபரான தினேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிளாஸ்டிக் கேன் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், 5 வயதுடைய யாழினி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தினேஷ் தனது மோட்டார் சைக்கிளில் சடையப்பபுரம் வாய்க்கால் மேடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பொன்னுச்சாமி என்பவர் ஓட்டி வந்த மொபட் தினேஷின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த தினேஷ் மற்றும் பொன்னுசாமி ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தினேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதன்பின் பொன்னுசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.