லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சகோதரர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றம் பகுதியில் சத்யநாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதய், சரண் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் எடப்பாளையம் பஜாருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதனை அடுத்து திருவள்ளூர் நெடுஞ்சாலையோரம் நின்ற லாரி மீது உதய் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதிவிட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த உதய் மற்றும் சரண் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அண்ணன், தம்பி இருவரின் சடலங்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.