Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாரியூர் கிராமத்தில் விவசாயியான தங்கராஜ்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை தங்கராஜ் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணன் புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அவர் சாலையில் திரும்ப முயன்ற போது பின்னால் வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் தங்கராஜின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த தங்கராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |