மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த எம்மேகவுண்டன்பாளையம் பகுதியில் இருக்கும் தனியார் நார் தொழிற்சாலையில் நீலகிரி சேர்ந்த ராகுல் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராகுல் மோட்டார் சைக்கிளில் சேரிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கருப்பராயன் கோவில் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நடந்து சென்ற சகுந்தலா என்பவர் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ராகுல் மற்றும் சகுந்தலா ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.