கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில் நண்பர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழையூர் கிராமத்தில் கூலித் தொழிலாளியான லட்சுமணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான பழனி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலை விஷயமாக வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் கோவிந்தன்கொட்டாய் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த லட்சுமணன் மற்றும் பழனி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் சடலங்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.