Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் கூலித் தொழிலாளியான முருகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக வெளியில் சென்றுள்ளார். இந்நிலையில் நாட்டான் கொட்டாய் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகேசனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |