கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதிய விபத்தில் அடுத்தடுத்த 7 கடைகள் சேதமடைந்தது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கோக்கர்ஸ்வாக் பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளது. இந்நிலையில் கனரக லாரி ஒன்று அப்பகுதியில் இருக்கும் மேடான சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பிரேக் பிடிக்காமல் பின்னோக்கி நகர்ந்த லாரி அடுத்தடுத்த சாலையோர கடைகள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் 7 கடைகள் சேதமடைந்தது. மேலும் விபத்து நடந்த சமயம் பொதுமக்கள் யாரும் அங்கு இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.