Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி….. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஐ.ஏ.எஸ் அதிகாரி…. சென்னையில் கோர விபத்து…!!

கார் மீது லாரி மோதிய விபத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார்.

சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பகுதியில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான நந்தகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நந்தகோபால் தனது காரில் கோயம்பேடு 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்த காரை பன்னீர்செல்வம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி நந்தகோபாலின் கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி மற்றும் கண்ணாடி சேதம் அடைந்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக நந்தகோபாலும், பன்னீர்செல்வமும் காயமின்றி உயிர் தப்பி விட்டனர். இதுகுறித்து பன்னீர்செல்வம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான விமல் சந்திரன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |