மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் ஜோதிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மின் வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். இவர் நடுவலூர் காட்டு கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த லாரி விக்னேஷின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த விக்னேஷ் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதால் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்னேஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.