மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் ஐ.டி.ஐ முதல்வர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அவ்வையார் பாளையத்தில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கரட்டிபாளையத்தில் இருக்கும் தனியார் ஐ.டி.ஐ-ல் முதல்வராக வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் ஆனந்தன் சத்தியமங்கலம்-ஈரோடு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி ஆனந்தனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஆனந்தனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஆனந்தன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.