மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள கோரந்தாங்கல் பகுதியில் கட்டிட மேஸ்திதியான மகேந்திரன்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல் உடைக்கும் தொழிலாளியான ராஜி(42) என்பவரருடன் மோட்டார் சைக்கிளில் திருவலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் செம்பராயநல்லூர் புதூர் அருகே சென்றபோது காட்பாடி நோக்கி சிமெண்ட் வரம் ஏற்றி வேகமாக சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மகேந்திரன், ராஜி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.