மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள மாத்தூர் பகுதியில் முகமது அக்பர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமது யாசிம் என்ற மகன் உள்ளார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி முடிந்து முகமது யாசிம் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர்கள் மதுரவாயல் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முகமது யாசிம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரது நண்பரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.