ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலையில் இருந்து லாரி ஒன்று கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கர்ணன்(50) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் வெள்ளியணை ஒத்தையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் புங்கம்பாடியைச் சேர்ந்த வழக்கறிஞர் கனகராஜ்(34) மற்றும் அவரது மாமியார் சுசீலா(50) ஆகியோர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் கர்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.