Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. துடிதுடித்து இறந்த தம்பதியினர்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு அண்ணாநகரில் விவசாயியான சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயக்கொடி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் மஞ்சள்பரப்பு கிராமத்தில் இருக்கும் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளனர். இவர்கள் திண்டுக்கல்-வத்தலகுண்டு புறவழி சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த தம்பதியினர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். மேலும் கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தம்பதியினரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |