Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. துடிதுடித்து இறந்த ஆடுகள்…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

லாரி மோதிய விபத்தில் ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டி 3-வது வார்டுக்குட்பட்ட கிழக்கு தெருவில் அரசு பேருந்து ஓட்டுனரான செந்தில் (45) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி(35). இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று அப்பகுதியில் இருக்கும் காட்டு பகுதியில் 8 ஆடுகளை மேய்த்து விட்டு தனலட்சுமி மாலை 6.45 மணியளவில் வீட்டிற்கு ஓட்டி வந்தார். இந்நிலையில் பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் ஆடுகளை ஓட்டி வந்த போது, எதிரே வந்த சிமெண்டு பல்கர் லாரி ஆடுகள் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் 7 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன. மேலும் ஒரு ஆடு படுகாயமடைந்தது.

இதனையடுத்து ஆடுகளை இழந்த தனலட்சுமி மற்றும் கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இணைந்து இறந்த ஆடுகளை சாலையில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஆடுகள் மீது மோதி விட்டு சென்ற லாரியை பிடித்து, அதன் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.

Categories

Tech |