பால் வேன் மோதி நடந்து சென்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆணையம்பட்டி பகுதியில் சூர்யா(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சினேகா(22) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருக்கும் சினேகா தனது தாயார் வீட்டிலிருந்து கணவர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த பால் வேன் சினேகா மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சினேகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பால் வேன் ஓட்டுனரான சங்கர்(32) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.