திருச்சி மாவட்டத்தில் உள்ள அம்பலக்காரனூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது கருங்குளம் பிரிவு சாலை அருகே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் கருப்பையா மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று கருப்பையாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.