Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. துடிதுடித்து இறந்த முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள சிறுபாக்கத்தில் இருக்கும் நெடுஞ்சாலையில் நேற்று இரவு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |