மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தாய்-மகன் இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிகை பாரதி நகரில் துணி தைக்கும் தொழிலாளியான பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமாரி என்ற மனைவியும், கணேஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணேஷ் தனது தாயுடன் மோட்டார் சைக்கிளில் சூளகிரி நோக்கி சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து புலியரசி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தாய், மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் சடலங்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.