அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள எஸ்.மேட்டுப்பாளையம் நூலகம் அருகில் சலவை தொழிலாளியான ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமசாமி தனது வீட்டிலிருந்து கோவில்பாளையத்திற்கு நடந்து சென்றுள்ளார். இதனையடுத்து எஸ்.மேட்டுப்பாளையம் பிரிவில் இருக்கும் நான்கு வழி சாலையை கடக்க முயற்சி செய்த போது அவ்வழியாக வேகமாக வந்த வாகனம் ராமசாமியின் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராமசாமி அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.