Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. 50 அடி உயரத்திலிருந்து விழுந்த போலீஸ்காரர்…. ஈரோட்டில் கோர விபத்து…!!

மேம்பால சுற்று சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் போலீஸ்காரர் 50 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள காளிங்கராயன்பாளையம் பகுதியில் ஞானப்பிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவர் போச்சம்பள்ளி பகுதியில் தங்கியிருந்து தமிழ்நாடு 7-வது சிறப்பு காவல் படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஞானப்பிரகாசம் பெருந்துறையில் இருக்கும் நண்பர் ஒருவரை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

இதனை அடுத்து கோணவாய்காலை அடுத்த லட்சுமி நகர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறிய ஞானப்பிரகாசத்தின் மோட்டார் சைக்கிள் பாலத்தின் சுற்று சுவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஞானப்பிரகாசம் சுமார் 50 அடி பள்ளத்தில் இருக்கும் லட்சுமி நகர் போலீஸ் சோதனை சாவடி பேருந்து நிறுத்தத்தில் விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக ஞானப்பிரகாசத்தை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |