Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய 2 மோட்டார் சைக்கிள்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. திருப்பூரில் நடந்த சோகம்….!!

2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் மற்றும் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் சரண் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக்., 4 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்டதையடுத்து சரண் கேரளாவில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் சரண் வந்து கொண்டிருந்த போது விஜயமங்கலம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரும் வெங்கடேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 மோட்டார் சைக்கிளும் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்துக்குளி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |