Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயங்கரமான தீ விபத்து… “பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்”…. தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை…!!!!

தனியார் கல்லூரி சேர்மன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.

சென்னை, ஆவடியை அடுத்துள்ள திருநின்றவூர் கிருஷ்ணாபுரம் மூன்றாவது மெயின் சாலை வேப்பம்பட்டு பகுதியில் இருக்கின்ற தனியார் கல்லூரி சேர்மன் எம். ஜி. பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டின் தரைதளத்தில் அவருடைய மகன் 39 வயதுடைய பிரபு பாஸ்கர் என்பவர் வசித்து வருகின்றார். இரண்டாவது தளத்தில் அவருடைய மகள் 41 வயதுடைய இந்துமதி மற்றும் அவருடைய கணவர் 45 வயதுடைய சீனிவாசன் மற்றும் அவர்களுடைய இரண்டு பிள்ளைகள் வசித்து வருகின்றார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு சீனிவாசனும் இந்துமதியும் வெளியே சென்று விட்டார்கள். அவருடைய பிள்ளைகள் மட்டும் வீட்டில் இருந்தார்கள். அப்போது பூஜை அறையிலிருந்து திடீரென்று மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது. பூஜை அறையில் மரத்தாலான அறைகள் இருந்ததால் மரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதை பார்த்து பதறிப்போன இரண்டு பிள்ளைகளும் கீழே இறங்கி பிரபு பாஸ்கரிடம் கூறினார்கள். உடனே அவர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் மற்றும் திருவூர் பகுதியிலிருந்து தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தார்கள். ஆனால் அவர்கள் வருவதற்குள் தீ வீடு முழுவதும் பரவியது.

அதோடு மட்டுமல்லாது சமையலறையிலிருந்த சிலிண்டர் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் தீ படபடவென சத்தத்துடன் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. அதன்பிறகு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தார்கள். நல்ல சமயம் வீட்டில் யாரும் இல்லாததால் தீவிபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. ஆனாலும் வீட்டிற்குள் இருந்த சுமார் 5 லட்சம் மதிப்பிலான பீரோ, கட்டில், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், நாற்காலி, வீட்டின் ஆவணங்கள், ஏர்கூலர் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாயின. இது குறித்து திருநின்றவூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |