பயங்கரவாதத்தை வரையறுப்பதில் ஐ.நா உறுப்பு நாடுகள் இழுத்தடித்து வருகின்றன என இந்தியா குற்றம் சுமத்தி உள்ளது.
இதுப்பற்றி இந்திய துணைத்தூதர் தினேஷ் சேத்தியா ஐ.நா பொதுச் சபை மாநாட்டில் பேசும் பொழுது, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் எதிர் நோக்கியுள்ள அபாயத்தில் ஆபத்தானது பயங்கரவாதம்.
ஆனால், ஐநா உறுப்பு நாடுகளால் இந்தப் பிரச்சினைக்கு எதிராக ஒரு முடிவை எடுக்க முடியவில்லை. எதற்காக ஐநா அமைப்பு அமைக்கப்பட்டதோ அந்த குறிக்கோளை நிறைவேற்றுகிறதா? என்ற ஐயம் எழுகிறது.
சர்வதேச பயங்கரவாதத்தை ஒன்று சேர்ந்து எதிர்கொள்வதற்கான ஒப்பந்தத்தை நிறைவேற்ற இயலாத நிலை நீடிப்பதற்கான காரணம் பயங்கரவாதத்திற்கான பொதுவான வரையறையை உருவாக்க தவறியதே ஆகும் என கூறினார்.
ஐநா பொதுச்சபையில் சிசிஐடி வரைவு ஒப்பந்தத்தை இந்தியா 1986 ஆம் ஆண்டு சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்காக அறிமுகப்படுத்தின. இருப்பினும், பயங்கரவாதத்திற்கு எதிரான வரையறையை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதால் ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் சிக்கல் நீடித்துக் கொண்டே இருக்கிறது.