மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சைப்ரஸ் நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “பயங்கரவாதத்தின் மூலமாக இந்தியாவை யாரும் பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது. அதை நாம் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. அனைவருடனான உறவை சுமூகமான முறையில் பேணுவதற்கே இந்தியா விரும்புகிறது.
ஆனால் அதற்காக சுமூகமான உறவு என்பதற்கு மன்னித்துக் கொண்டே இருப்பது அல்ல. விலகி நின்று பயங்கரவாதத்தை வேடிக்கை பார்ப்பது என்று அர்த்தம் கிடையாது. ஏனென்றால் இந்தியா இதில் தெளிவாக இருக்கிறது. மேலும் இந்தியா தற்போது சுதந்திரமான பொருளாதார பலம் மிக்க நாடாக விளங்குகிறது” என தெரிவித்துள்ளார்.