ஆட்டோ ஒன்று கண்ணி வெடியில் சிக்கி வெடித்து சிதறியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அல்கொய்தா ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் சோமாலியா நாட்டில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாதிகள் கண்ணிவெடிகளை ஆங்கங்கே புதைத்து வைத்து போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜவஹர் மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலையில் வந்த ஆட்டோ ஒன்று கண்ணிவெடியில் சிக்கி வெடித்து சிதறியது.
இதனால் ஆட்டோவில் பயணம் செய்த 4 ஒட்டக வியாபாரிகள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் அல் ஷபாப் பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியவர்கள் என சோமாலி அரசு குற்றம் சாட்டியுள்ளது.