சர்தார் மசூத் கானை அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக நியமனம் செய்ய அமெர்க்கா ஒப்புதல் அளித்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்காட் பெர்ரி, சர்தார் மசூத் கானை பயங்கரவாதிகளின் ஆதரவாளர் என்று குறிப்பிட்டு அவருடைய நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்நிலையில் அவருடைய நியமனத்திற்கான ஒப்புதலை அமெரிக்கா அளித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்தார் மசூத் கான் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைவராக பதவி வகித்தார்.
முன்னதாக சர்தார் மசூத் கான் பாகிஸ்தானின் ஐ.நாவுக்கான நிரந்தர தூதராகவும், சீனாவுக்கான பாகிஸ்தான் தூதராகவும் இருந்துள்ளார். மேலும் ஆசாத் மஜீத் கான் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதருக்கு மாற்றாக புதிதாக சர்தார் மசூத் கானை நியமித்துள்ளது. இந்நிலையில் சர்தார் மசூத் கான் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக நியமனம் செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஆசிப் இபித்கார் அறிக்கை ஒன்றை சனிக்கிழமை வெளியிட்டுள்ளார்.