Categories
உலக செய்திகள்

பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதல்…. 22 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…..!!!!!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் ஒன்றுதான் பர்கினோ பசோ. நைஜீரியா, மாலி ஆகிய நாடுகளை எல்லைகளாக கொண்டிருக்கும் இந்நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிப்பதற்கு அந்நாட்டு பாதுகாப்புபடையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பயங்கரவாதிகளுக்கு எதிராக, பாதுகாப்பு படையினருக்கு உதவியாக அரசு ஆதரவு குழுக்களும் ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் பர்கினோ பாசோவின் கோஷி மாகாணத்தின் போர்ஸோ நகரிலுள்ள கிராமத்தில் பொதுமக்கள் மீதுபயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த தாக்குதலில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாத குழுக்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த தாக்குதலை அடுத்து அங்கு பாதுகாப்புபடையினர் குவிக்கப்பட்டு இருக்கின்றனர்.

Categories

Tech |