சமீப காலமாக காஷ்மீரில் பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கண்காணிப்பு பணிகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் மாநில அரசு முக்கிய பயங்கரவாதிகள் சிலருடன் தொடர்பில் இருந்ததாக கூறி 5 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது.
அந்த அரசு ஊழியர்களில் ஒரு ஆசிரியர், ஒரு கணினி நிர்வாகி, ஒரு சுகாதாரத்துறை ஊழியர் மற்றும் இரண்டு பேர் காவல்துறையினர் என்பது தெரியவந்துள்ளது.