ராணுவ வீரர்கள் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் 7 பேரை சுட்டு கொன்றுள்ளனர்.
அல்-கொய்தாவின் ஆதரவு பெற்ற அல்-ஷபாப் என்ற பயங்கரவாதிகள் சோமாலியாவில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்த பயங்கரவாதிகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். மேலும் அல்-ஷபாப் பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்க ராணுவம் தீவிரமாக போராடி வருகின்றது.
இதனை தொடர்ந்து சோமாலியா நாட்டின் தெற்கு பகுதியில் ஜூப்பாலாந்து மாகாணத்தில் உள்ள நான்கு வெவ்வேறு கிராமங்களில் அமைந்துள்ள அல்-ஷபாப் பயங்கரவாதிகளுடைய இருப்பிடத்தின் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள். மேலும் ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. இந்நிலையில் துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதிகள் 7 பேர் ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். குறிப்பாக இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் முற்றிலுமாக அளிக்கப்பட்டது.