மும்பை, புல்வாமா தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த குற்றத்திற்காக கடந்தாண்டு கைது செய்யப்பட்டு, லாகூரில் உள்ள கோர்ட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து நடைபெற்று இந்த இரண்டு வழக்குகளில் நேற்று தீர்ப்பு வழங்கிய லாகூர் உயர்நீதிமன்றம், ஹபீஸ் சயீத், அவரது கூட்டாளி ஜாபர் இக்பால் ஆகியோருக்கு தலா ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பில் குறைபாடுகள் உள்ளதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், இன்று (பிப்ரவரி 16) பாரிஸில் நடைபெறவுள்ள நிதி கண்காணிப்பு பணிக்குழு (FATF) கூட்டத்தில், பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தானை தடை செய்யப்பட்ட நாடுகள் பட்டியலில் சேர்ப்பது குறித்து முடிசெய்யப்படவுள்ளது.
இந்தக் கூட்டத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக முடிவு எடுக்கப்பட்டால் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஷபீஸ் சயீத் விரைவில் விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் உயர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய ஹபீஸ் சயீத்தின் வழக்கறிஞர், “FATF கொடுத்த ஆழுத்தத்தினாலேயே எனது கட்சிக் காரர் (ஹபீஸ் சயீத்) குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்” எனத் தெரிவித்தார்.