அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அமெரிக்க ராணுவ படைகள் வடமேற்கு சிரியாவில் நேற்றிரவு என்னுடைய உத்தரவின் பேரில் நமது கூட்டாளிகளையும், அமெரிக்க மக்களையும், உலகை பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். நம்முடைய படைகளின் துணிச்சல் மற்றும் திறமைக்கு நன்றி.
பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹீம் அல் ஹாஷிமி அல் குரேஷி இந்த சண்டையின் போது கொல்லப்பட்டுள்ளார். அமெரிக்க படைவீரர்களுக்கு இந்த நடவடிக்கையின்போது எந்த பாதிப்பும் ஏற்படவில்லை பத்திரமாக திரும்பி உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.