Categories
உலக செய்திகள்

பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு…. வாலிபர் கைது….. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!!!

உத்திரப்பிரதேசத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய முகமது நதீம்(25) என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஸ்-ஏ-முகமது இயக்க பயங்கரவாதிகளுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பில் உள்ள சைஃபுல்லாவை பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர். அதன் பிறகு அவர் கான்பூர் அழைத்து வரப்பட்டார்.

அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆதார் அட்டை உள்ளிட்ட போலி மின்னணு அடையாள அட்டை தயாரிப்பில் இருந்தவர் என்பதும், அதனைப் போல் 50க்கும் மேற்பட்ட அட்டைகளை தயாரித்து நதீம் மட்டுமின்றி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளுக்கு வழங்கியதும் தெரிய வந்தது. இதற்காக பயங்கரவாதிகளுடன் அவர் சமூக வலைதளம் மூலம் தொடர்பில் இருந்துள்ளார். மேலும் சைஃபுல்லாவிடம் இருந்து கைப்பேசி, சிம்கார்டு, கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று டிஎஸ்பி கூடுதல் டிஜிபி நவின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |