இலங்கை நாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.
இலங்கை நாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இத்திருத்தங்கள் மிகவும் அத்தியாவசியமானது என்று இலங்கை நாட்டு அரசு கூறியுள்ளது. மேலும் அந்நாட்டு அரசின் வெளியுறவு துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் விரைவில் நாடாளுமன்றத்தில் செய்யப்படும். மேலும் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டால் அவை பிடிஏ சட்டத்தை மேலும் சிறப்பிக்கும். இலங்கை நாட்டு அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரின் அடிப்படை உரிமைகள் பாதுகாப்பிற்கு அந்தத் திருத்தங்கள் வழிவகை செய்யும்” என்று அதில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் 43 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யாமலே 90 நாட்கள் வரை காவலில் வைத்திருக்கலாம். இதனைத் தொடர்ந்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஈஸ்டர் தின தாக்குதலுக்குப் பிறகு 2020-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மனித உரிமை வழக்கறிஞர் ஹிஜாஸ் இஜாஸ் ஹிஸ்புல்லா நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஐரோப்பிய யூனியன் இலங்கையிடம் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுள்ளது.
மேலும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளாமல் இருக்க கடந்த 27-ஆம் தேதி இலங்கை அரசு அறிவித்தது. சர்வதேச நிர்ணயங்களுக்கு ஏற்ப குற்றச்சாட்டு பதிவு செய்யாமல் அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர் காவலில் வைப்பதற்கான அதிகபட்ச கால அளவை குறைப்பது, கைதிகள் துன்புறுத்தப் படுவதை தடுக்கவும், அவர்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு மாஜிஸ்திரேட் அடிக்கடி சென்று சோதனை இடுவது, கைதிகளுக்கு வழக்கறிஞர்களை சந்திக்க அனுமதி வழங்குவது, அவர்கள் தங்களது உறவினர்களுடன் தொடர்பு கொண்டு பேசுவதை அனுமதிப்பது போன்ற பல்வேறு திருத்தங்களை இலங்கை அரசு முன்மொழிந்து உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தத் திருத்தங்கள் மிகவும் அத்தியாவசியமானது என்று இலங்கை நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது தெரிவித்துள்ளது.