Categories
உலக செய்திகள்

“பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கணும்…. வலியுறுத்திய நாடுகள்…..!!!!!

வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஆண்டனி பிளிங்கனையும், ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டினையும், இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கும், வெளியறவு மந்திரி ஜெய்சங்கரும் சந்தித்து 2 பிளஸ் 2 பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். இதனுடைய முடிவில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அதில் பாகிஸ்தான் தன் கட்டுப்பாட்டின் கீழுள்ள எந்தப் பகுதியும், பயங்கரவாத தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படாமல் உள்ளதை உறுதி செய்வதற்கு உடனே நீடித்த மற்றும் மாற்ற முடியாத நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று 2 பிளஸ் 2 பேச்சு வார்த்தையின்போது பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஷபாஸ் ஷெரீப் பிரதமராகிவுள்ள சூழ்நிலையில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

Categories

Tech |