Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பயங்கர சத்தத்துடன் உருண்டு வந்த கல்”…. தலைதெறிக்க ஓடிய பெண்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மலைகோட்டைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்த போது முத்தழகுபட்டி-சின்னகாளைநகர் சந்திப்பு பகுதியில் 2 பெண்கள் நடந்து சென்றனர். அப்போது ஒரு கல் பயங்கர சத்தத்துடன் மலைக்கோட்டையில் இருந்து உருண்டு வந்ததால் பெண்கள் அச்சத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து எதிரே சாலையில் சுமார் 30 அடி தூரத்தில் நின்று கொண்டிருந்த ஆம்னி வேன் மீது கல் விழுந்தது. மேலும் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ அடுத்த சில நொடிகளில் அந்த வழியாக சென்றது.

ஆனால் கல் விழாமல் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, மலைக்கோட்டையில் இருக்கும் பெரிய, சிறிய கற்கள் மழைக்காலத்தில் உருண்டு குடியிருப்பு பகுதிக்குள் விழுகிறது. மாதந்தோறும் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். எனவே மலைக்கோட்டையில் விழும் நிலையில் இருக்கும் கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |