திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டனில் பக்கிங்ஹாம் ஹிஸ்டன்டிங் பகுதி அமைந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டு பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இந்தத் தீ அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு அணைத்தனர். இருப்பினும் ஒரு வீடு தீ விபத்தில் முற்றிலும் சேதமாகியது.
இதனையடுத்து 5 வீடுகள் தீ விபத்தில் சேதமடைந்த நிலையில், 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த 5 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சிலிண்டர் கசிவு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.